சிலை கடத்தல் வழக்கு: "தெளிவான விசாரணை தேவை என்பதால் சிபிஐ-க்கு மாற்றம்" - அமைச்சர் பாண்டியராஜன்

சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் கடந்த 1 ஆண்டு காலமாக எந்த அறிக்கையையும் தாக்கல் செய்யாததால், அரசு தாமாக முன்வந்து சிபிஐ விசாரணைக்கு மாற்றியுள்ளதாக அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்தார்.
சிலை கடத்தல் வழக்கு: தெளிவான விசாரணை தேவை என்பதால் சிபிஐ-க்கு மாற்றம் - அமைச்சர் பாண்டியராஜன்
x
பொன்.மாணிக்கவேல் தலைமையிலான சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் கடந்த 1 ஆண்டு காலமாக எந்த அறிக்கையையும் தாக்கல் செய்யாததால், அரசு தாமாக முன்வந்து சிபிஐ விசாரணைக்கு மாற்றியுள்ளதாக அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்தார்.

ஆரணியில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியின் 25-ஆம் ஆண்டு விழா மற்றும் பட்டமளிப்பு விழாவில் கலந்துக்கொண்ட அவர், பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய போது இவ்வாறு கூறினார். மேலும் இதில் எந்த அரசியல் உள்நோக்கமும் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்