காவிரி தண்ணீர் கடைமடை பாசனப் பகுதிகளை சென்றடையவில்லை - பாமக நிறுவனர் ராமதாஸ்

காவிரி நீர் வீணாக கடலில் கலந்து வருவது தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் விரிவான அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்..
காவிரி தண்ணீர் கடைமடை பாசனப் பகுதிகளை சென்றடையவில்லை - பாமக நிறுவனர் ராமதாஸ்
x
மேட்டூர் அணையிலிருந்து காவிரியில் திறந்து விடப்பட்ட தண்ணீரில் பெரும் பகுதி விவசாயத்துக்குப் பயன்படாமல் வங்கக் கடலில் கலந்து வீணாகியிருக்கிறது. மேட்டூர் அணையிலிருந்து திறந்து விடப்படும் தண்ணீர் அடுத்த 3 நாட்களில் கல்லணைக்கும், அடுத்த ஒரு வாரத்தில் அனைத்து கடைமடை பகுதிகளையும் சென்றடைவது வழக்கமாகும். ஆனால், இம்முறை மேட்டூர் அணையிலிருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர்  14 நாட்களாகியும் நாகை மற்றும் திருவாரூர் மாவட்டங்களிலுள்ள கடைமடை பாசனப் பகுதிகளை  சென்றடையவில்லை. கடந்த சில நாட்களில் மட்டும் காவிரி மற்றும் கொள்ளிடம் வழியாக கிட்டத்தட்ட 16 டி.எம்.சி. வீணாக கடலில் கலந்துள்ளது. வழக்கமாக காவிரி பாசன மாவட்டங்களில் 3.15 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடியும், 16 லட்சம் ஏக்கரில் சம்பா சாகுபடியும் செய்யப்படுவது வழக்கம். ஆனால், தற்போது கடைமடை பாசனப் பகுதிகளுக்கு தண்ணீர் செல்லாததால் குறுவை சாகுபடி செய்யப்பட்ட பகுதிகளில் வறட்சியான சூழல் நிலவுகிறது. இத்தகைய நிலை ஏற்பட்டதற்கு காரணமே காவிரியின் கிளை ஆறுகளிலும், பாசனக் கால்வாய்களிலும் தூர் வாரப்படாதது தான்.  இதற்காக ஒதுக்கப்பட்ட நிதியில் முறைகேடு செய்யப்பட்டதாகவும் குற்றச்சாட்டு இருக்கிறது..பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் சொந்த செலவில் தூர்வாரியப் பகுதிகளில் மட்டும் தான் நீர் சென்றுள்ளது. தமிழ்நாட்டில் கடந்த 6 ஆண்டுகளாக குறுவை சாகுபடி நடைபெறவில்லை. காவிரி கிளை ஆறுகள் மற்றும் பாசனக் கால்வாய்களை தூர்வாரி சீரமைப்பதுடன்,  காவிரி படுகைகளில்  தடுப்பணைகளை கட்ட அரசு முன்வர வேண்டும். இவ்வாறு பாமக நிறுவனர் ராமதாஸ் தமது அறிக்கையில்  குறிப்பிட்டுள்ளார். 




Next Story

மேலும் செய்திகள்