புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதில் சிக்கல்...

புதுச்சேரி சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டுக்கு ஆளுனரின் ஒப்புதல் கிடைக்காததால், கூட்டத்தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதில் சிக்கல்...
x
புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதில் சிக்கல்...

புதுச்சேரி சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர், கடந்த 2-ஆம் தேதி தொடங்கியது. அன்றைய தினமே, முதலமைச்சர் நாராயணசாமி பட்ஜெட் தாக்கல் செய்தார். அதைத் தொடர்ந்து 2 நாள்கள் ஆளுனர் உரை மீது நன்றி தெரிவிக்கும் தீர்மானமும், அடுத்த இரண்டு நாட்களுக்கு பட்ஜெட் மீதான பொது விவாதமும் நடைபெற்றது. பேரவை அலுவல்கள் அனைத்தும் இன்று முடிந்த நிலையில், அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டுக்கு துணை நிலை ஆளுநர் கிரண்பேடியிடம் இருந்து இதுவரை ஒப்புதல் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் கூட்டத்தொடரை  தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைப்பதாக சபாநாயகர் வைத்திலிங்கம் அறிவித்தார். புதுச்சேரி சட்டப்பேரவையில் கடந்த மார்ச் மாதம் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட்டில் 4 மாத செலவினங்களுக்காக மட்டுமே ஒப்புதல் பெறப்பட்டுள்ளதால், அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க கூட நிதிகிடைக்காத நிலை உருவாகியுள்ளது.



Next Story

மேலும் செய்திகள்