ஆர்.கே.நகரில் தினகரனுக்கு எதிர்ப்பு - மர்ம நபர்கள் கல்வீசி தாக்கியதால் பதற்றம்

ஆர்.கே.நகர் தொகுதிக்கு வந்த எம்எல்ஏ தினகரனுக்கு எதிர்ப்பு தெரிவித்து மர்மநபர்கள் சிலர் கல்வீசி தாக்குதல் நடத்தியதில் பெண் காவல் ஆய்வாளர் உட்பட 2 பேர் காயமடைந்தனர்.
ஆர்.கே.நகரில் தினகரனுக்கு எதிர்ப்பு - மர்ம நபர்கள் கல்வீசி தாக்கியதால் பதற்றம்
x
சென்னை ஆர்.கே. நகர் தொகுதி எம்எல்ஏவும், அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச் செயலாளருமான தினகரன் நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காக தனது தொகுதிக்கு வந்தார். அப்போது அங்கு அவர் வருவதற்கு அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். 

திடீரென மர்மநபர்கள் சிலர் கற்களை வீசி எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. பல்வேறு இடங்களில் இருந்து கற்கள் வீசப்பட்டதில் எண்ணூர் காவல் ஆய்வாளர் பிரேமா காயமடைந்தார். தலையில் ரத்தம் வழிந்த நிலையில் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

தொடர்ந்து கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டதில் மேலும் ஒருவர் படுகாயமடைந்தார். ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கல்வீச்சு நடத்தப்பட்டதால் அந்த பகுதியே பரபரப்பாக காட்சியளித்தது. இதையடுத்து கூடுதல் காவல் ஆணையர் ஜெயராமன் சம்பவ இடத்திற்கு வந்த பிறகு நிலைமை கட்டுக்குள் வந்தது.  ஆர்.கே நகர் தொகுதிக்கு வருவேன், பயப்பட மாட்டேன் - டிடிவி தினகரன் 
தொகுதிக்குள் வரவிடாமல் தம்மை அ.தி.மு.க.வினர் தடுப்பதாக தினகரன் குற்றம்சாட்டியுள்ளார். கல்வீச்சு, மோதல் சம்பவத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், 20 ரூபாய் டோக்கன் வழங்கியது அ.தி.மு.க.வினரே எனவும் குற்றம்சாட்டினார். Next Story

மேலும் செய்திகள்