"யார் நினைத்தாலும் எங்கள் ஒற்றுமையை குலைக்க முடியாது" - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்

யார் நினைத்தாலும் அதிமுகவில் உள்ள எங்களின் ஒற்றுமையை குலைக்க முடியாது என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
யார் நினைத்தாலும் எங்கள் ஒற்றுமையை குலைக்க முடியாது - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்
x
சட்டப்பேரவையில் முதலமைச்சர் அறிவித்த திட்டங்களின் நிலை மற்றும் அதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளதா என ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, 2016ஆம் ஆண்டு முதல் அறிவிக்கப்பட்ட திட்டங்கள், அதன் நிலை உள்ளிட்டவை குறித்து பட்டியலிட்டு பதில் அளித்தார். அப்போது பேசிய எதிர்க்கட்சி துணைத்தலைவர் துரைமுருகன், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் தாங்கள் அறிவித்த திட்டங்கள் பற்றி மட்டும் கூறுவதாகவும், இடையில் முதலமைச்சராக இருந்த ஒருவரை பற்றி மறந்துவிட்டீர்களே என்று கூறினார்.  இதற்கு பதிலளித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, யார் நினைத்தாலும் எங்கள் ஒற்றுமையை ஒன்றும் செய்ய முடியாது,  நாங்கள் எப்போதும் ஒற்றுமையாகவே இருப்போம் என்று தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்