கோவையில் குடிநீர் வழங்கும் உரிமையை தனியார் நிறுவனத்திற்கு விற்கும் முடிவுக்கு ஸ்டாலின் கண்டனம்
கோவை மாநகர மக்களுக்கு குடிநீர் வழங்கும் உரிமையை தனியார் நிறுவனத்திற்கு விற்கும் முடிவுக்கு, எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கோவை மாநகர மக்களுக்கு குடிநீர் வழங்கும் உரிமையை தனியார் நிறுவனத்திற்கு விற்கும் முடிவுக்கு, எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பிரான்ஸ் நாட்டின் சுயஸ் என்ற நிறுவனத்திற்கு கோவைக்கு குடிநீர் வழங்கும் உரிமத்தை, கடந்த பிப்ரவரி மாதம் 3 ஆயிரத்து 150 கோடிக்கு, அ.தி.மு.க அரசு வழங்கியிருப்பதை, சுயஸ் நிறுவனம் தனது இணையதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனால், எதிர்காலத்தில், கோவை மக்கள் தங்கள் குடிநீர்த் தேவைக்கு, இந்தத் தனியார் நிறுவனத்திடம் கட்டணம் செலுத்தி, காத்திருக்க வேண்டிய கட்டாயம் உருவாகும் அபாயம் ஏற்படும் என்று குறிப்பிட்டுள்ள ஸ்டாலின்,
அடிப்படை உரிமையான குடிநீரிலும் அரசு லாபம் ஈட்டக் கருதிச் செயல்படுவதை கண்டிப்பதாக தெரிவித்துள்ளார்.
Next Story