தமிழிசைக்கு எதிர்ப்பு : பாஜக அலுவலகம் முற்றுகை - அரசு பேருந்து கண்ணாடி உடைப்பு

தமிழிசைக்கு எதிர்ப்பு : பா.ம.க.வினர் 100 பேர் கைது - அரசு பேருந்து கண்ணாடி உடைப்பு
தமிழிசைக்கு எதிர்ப்பு : பாஜக அலுவலகம் முற்றுகை - அரசு பேருந்து கண்ணாடி உடைப்பு
x
பாமக நிறுவனர் ராமதாஸ் குறித்து, பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜன், சில அவதூறு கருத்துக்களை தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அக்கட்சியினர், பாமக துணை பொதுச் செயலாளர் ஏ.கே.மூர்த்தி தலைமையில், சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக அலுவலகத்தை முற்றுகையிட  ஊர்வலமாக புறப்பட்டனர். இதையடுத்து, வழியிலேயே அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். அப்போது பாஜக மற்றும் பாமகவினர் இடையே கைகலப்பு ஏற்பட்டது. உடனடியாக போலீஸார் தலையிட்டு அவர்களை சமாதானம் செய்தனர். இதனிடையே, அந்த வழியாக சென்ற அரசு பேருந்தின் கண்ணாடி உடைக்கப்பட்டது.


 

மர்ம நபர்கள் தாக்குதல் - பாஜக நிர்வாகி படுகாயம்

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள காருவள்ளி ஊராட்சியைச் சேர்ந்த பெரியசாமி, பாஜகவில் ஒன்றிய செயலாளராக உள்ளார். இவர், தனது தோட்டத்தில் உள்ள சுமார் 600 தேக்கு மரச் செடிகளை, உறவினர்களான முருகேசன், குமார் ஆகியோர் ஆசிட் ஊற்றி அழித்து விட்டதாக போலீஸில் புகார் தெரிவித்திருந்தார். இந்நிலையில், மர்ம நபர்கள் சிலர் இரும்புக் கம்பியால் பெரியசாமியை தாக்கியுள்ளனர். இதனால் படுகாயமடைந்த அவர், சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்