18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் ஏன்..?

18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் ஏன்..?
18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் ஏன்..?
x
18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் ஏன்..?

2017  ஆம் ஆண்டு ஆகஸ்ட் 22  ஆம் தேதி - ஜக்கையனுடன் சேர்த்து, 19 எம்.எல்.ஏ.,க்கள் தமிழக ஆளுநரைச் சந்தித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கை இல்லை என மனு அளித்தனர். 

ஆகஸ்ட் 24 - அரசு கொறடா ராஜேந்திரன் அரசியல் சாசனத்தின் 10வது அட்டவணைப்படி, 18 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்வது தொடர்பான நடவடிக்கையை  தொடங்கினார் 

ஆளுநரிடம் அளித்த மனுவையும், தங்கத்தமிழ் செல்வன் மற்றும் வெற்றிவேல் ஆகியோர் பேசியதையும்   தினகரனுடன்  இணைத்து, கட்சிக்கு எதிராக செயல்பட்டதாக சபாநாயகரிடம் கொறடா  ராஜேந்திரன் புகார் அளித்தார்.

ஆகஸ்ட் 24 ம் தேதி  கொறடா மனுவின் அடிப்படையில் செப்டம்பர் 5 ஆம் தேதிக்குள் விளக்கம் அளிக்க 18 எம்.எல்.ஏ.க்களுக்கும் சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பினார் 

செப். 5  ஆம் தேதி ஆதாரம் இல்லாமல் விளக்கம் கேட்டிருப்பதாகக் கூறி 18 எம்.எல்.ஏ.க்கள் மனு அளித்ததை அடுத்து நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார் 

செப்டம்பர் 7 - விசாரணையை செப்டம்பர் 14 ஆம்தேதிக்கு  சபாநாயகர் தனபால் ஒத்திவைத்தார். 

செப்டம்பர் மாதம் 14 ஆம் தேதி  கொறடா அளித்த புகார் ஆவணங்கள் வழங்க 18 எம்.எல்.ஏ.க்களும் கோரிக்கை விடுத்தனர்.

செப்டம்பர் 18 ஆம் தேதி கட்சித்தாவல் தடைச் சட்டத்தின் கீழ் 18 எம்.எல்.ஏ.க்களையும் தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார்.

தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்​.ஏ.க்கள் யார், யார்..? 


18 எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்க வழக்கு : தீர்ப்பு எப்படி வர வாய்ப்பு..?



Next Story

மேலும் செய்திகள்