18 எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்க வழக்கு : தீர்ப்பு எப்படி வர வாய்ப்பு..?

18 எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்க வழக்கு : தீர்ப்பு எப்படி வர வாய்ப்பு..?
18 எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்க வழக்கு : தீர்ப்பு எப்படி வர வாய்ப்பு..?
x
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் 18 எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்க வழக்கில் தீர்ப்பு இன்று வெளியாக இருக்கிறது. நீதிபதிகள் எடுக்கும் முடிவு, தமிழக அரசியலில் என்ன மாதிரியான சூழல்களை ஏற்படுத்த வாய்ப்பிருக்கிறது.

வாய்ப்பு 1 : 18 எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்கப்பட்டது செல்லாது என்று நீதிமன்றம் கூறலாம். 18 பேரும் மீண்டும் சட்டமன்றத்திற்குள் நுழைந்து, நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு முயற்சிக்கலாம்.

வாய்ப்பு 2: தகுதி நீக்கம் செல்லாது என்று நீதிமன்றம் அறிவித்து, அதை எதிர்த்து அரசு மேல் முறையீடு செய்யலாம். அப்படி செய்து, இடைக்கால தடை பெற்றால், தற்போதைய நிலையே தொடரும். 
காட்சி உச்சநீதிமன்றத்திற்கு மாறும்.

வாய்ப்பு 3: தகுதி நீக்கம் செல்லும் என்று அறிவிக்கப்படலாம். அப்போது 18 பேரும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து, தற்போதைய நிலையே தொடரச் செய்யலாம்.  

வாய்ப்பு 4: தகுதி நீக்கம் செல்லும் என நீதிமன்றம் அறிவித்தால், மேல்முறையீடுக்குச் செல்லாமல், தினகரன் தரப்பு 18 தொகுதிக்கான இடைத் தேர்தலை சந்திக்க தயாராகலாம். 

வாய்ப்பு 5: Split Verdict எனப்படும் பிளவுபட்ட தீர்ப்பு வரலாம். அந்த சூழலில், மூன்றாவதாக ஒரு நீதிபதியிடம் வழக்கு அனுப்பப்படும். அவர் முடிவு  எடுக்கும் வரை தற்போதைய நிலையே தொடரும். 

வாய்ப்பு 6: எம்.எல்.ஏ-க்கள், தங்கள் தரப்பை கூற 
முழு வாய்ப்பு வழங்கி, ஆராய்ந்து முடிவெடுக்குமாறு, சபாநாயகரிடமே வழக்கை மீண்டும் அனுப்பி வைக்கலாம். 
 

Next Story

மேலும் செய்திகள்