என்னை கைது செய்ய வந்தால் இப்படி தான் இருப்பேன் - கவர்ச்சி படத்தை பதிவிட்ட கங்கனா ரணாவத்

வேளாண் சட்டங்கள் ரத்து தொடர்பாக சர்ச்சை கருத்து வெளியிட்ட பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத், தன்னை போலீசார் கைது செய்ய வந்தால் வீட்டில் இப்படி தான் இருப்பேன் என கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
x
வேளாண் சட்டங்கள் ரத்து தொடர்பாக சர்ச்சை கருத்து வெளியிட்ட பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத், தன்னை போலீசார் கைது செய்ய வந்தால் வீட்டில் இப்படி தான் இருப்பேன் என கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். 

வேளாண் சட்டங்களையும் ரத்து செய்யும் மத்திய அரசின் முடிவுக்கு அதிருப்தி தெரிவித்த நடிகை கங்கனா ரணாவத், அரசின் நடவடிக்கை வெட்கக்கேடாது மற்றும் நியாயமற்ற செயல் என விமர்சித்திருந்தார்.  அரசாங்கத்திற்கு பதிலாக தெருவில் இருப்பவர்கள் சட்டம் இயற்ற தொடங்கி விட்டதாகவும் வார்த்தைகளில் கடுமையை வெளிப்படுத்தி இருந்தார். மேலும், வேளாண் சட்டத்திற்கு எதிராக போராடியவர்களை பயங்கரவாதிகளுடன் ஒப்பிட்ட கங்கனா ரணாவத், சிக்கியர்களையும் மறைமுகமாக விமர்சித்திருந்தார்.

இதையடுத்து, சீக்கியர்களை அவதூறாக பேசியதாக கங்கனா ரணாவத் மீது மும்பை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. புகார் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், கங்கனா ரணாவத் தனது இன்ஸ்டகிராமில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளார். அதில் தன்னை கைது செய்ய போலீசார் வந்தால் வீட்டில் இப்படி தான் இருப்பேன் என கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்