நூதன முறையில் பல கோடி திருட்டு - வங்கி ஊழியர் குடும்பத்தோடு தலைமறைவு

நூதன முறையில் பல கோடி திருட்டு - வங்கி ஊழியர் குடும்பத்தோடு தலைமறைவு
x
கேரளாவில் கனரா வங்கியில் கணக்கு வைத்திருந்த வாடிக்கையாளர்களிடம் 8 புள்ளி 13 கோடி ரூபாய் சுருட்டிய வங்கி ஊழியரை போலீசார் தேடி வருகின்றனர்.

கேரள மாநிலம் பத்தனம் திட்டா பகுதியில் செயல்பட்டு வரும் கனரா வங்கியில் வாடிக்கையாளர் ஒருவரது கணக்கு ரத்து செய்யப்பட்டது. 10 லட்சம் ரூபாய் இருப்பு வைத்திருந்த வங்கி கணக்கு ரத்து செய்யப்பட்டது குறித்து விசாரணை நடைபெற்றது. அப்போது வங்கியில் காசாளராக பணியாற்றிய விஜீஷ் வர்கீஸ் என்பவர் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டது தெரியவந்தது. அதன்படி கடந்த 14 மாதங்களில் இவ்வாறு 8 கோடியே 13 லட்சம் ரூபாய் மோசடி செய்யப்பட்டது அம்பலமானது. தன்னை கண்டுபிடித்து விடுவார்கள் என்பதை அறிந்த வர்கீஸ் தன் குடும்பத்தோடு தலைமறைவானார். அவரது மோசடியை கண்டுபிடிக்க தவறிய வங்கி மேலாளர் உள்பட 5 ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர் . இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்