முதல் கம்யூனிஸ்ட் அமைச்சரவையில் இடம் பெற்ற கே.ஆர். கவுரியம்மா காலமானார்

கேரள மாநில முன்னாள் அமைச்சர் கே.ஆர் கவுரியம்மா திருவனந்தபுரம் தனியார் மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 102. கேரள மக்களால் பெரிதும் மதிக்கப்பட்டவர்.
முதல் கம்யூனிஸ்ட் அமைச்சரவையில் இடம் பெற்ற கே.ஆர். கவுரியம்மா காலமானார்
x
கேரள மாநில முன்னாள் அமைச்சர் கே.ஆர் கவுரியம்மா திருவனந்தபுரம் தனியார் மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 102. கேரள மக்களால் பெரிதும் மதிக்கப்பட்டவர். அரசியல் கட்சித் தலைவர்கள் புகழாரம். கேரளாவில்1957-ம் ஆண்டு அமைந்த முதல் கம்யூனிஸ்ட் அமைச்சரவையில் அங்கம் வகித்தவர் கே.ஆர்.கவுரியம்மா. கேரள மாநிலம் சேர்த்தலா பகுதியில் 1919-ம் ஆண்டு  பிறந்த இவர், சட்டம் பயின்று, மாணவர் பருவத்திலேயே அரசியலில் களம் இறங்கினார். நான்கு முறை கம்யூனிஸ்ட் அமைச்சரவையிலும், ஒரு முறை காங்கிரஸ் அமைச்சரவையிலும் அமைச்சராக கவுரியம்மா இருந்து உள்ளார்.1952 முதல் 10 முறை  சட்டமன்ற உறுப்பினராக தேர்வானவ இவர், 1957 ஆம் ஆண்டு, சக அமைச்சராக இருந்த டி.பி.தாமசை திருமணம் செய்து கொண்டார். இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சி இரண்டாக பிளவுப்பட்டபோது, கவுரியம்மா மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து செயல்பட்டார். 1994-ஆம் ஆண்டு மார்க்சிஸ்ட் கட்சியில் இருந்தும் வெளியேறிய அவர்,  ஜனநாயக பாதுகாப்பு சமிதி என்ற தனிக்கட்சியை தொடங்கினார். கவுரியம்மாவின் சுயசரிதைக்கு,  2011 -ல் கேரள சாகித்ய அகாடமி விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. இந்நிலையில், உடல்நலக்குறைவால் உயிரிழந்த கவுரியம்மாவுக்கு, பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்