சென்ட்ரல் விஷ்டா திட்டத்துக்கு ரூ.20,000 கோடி - மோடி அரசுக்கு, பிரியங்கா காந்தி எச்சரிக்கை

உயிர்காக்கும் மருத்துவ ஆக்ஸிஜன், கொரோனா தடுப்பூசிகள், மருத்துவமனை படுக்கைகள், மருந்துகள் பற்றாக்குறையால் நாட்டு மக்கள் அபாயத்தில் சிக்கித் தவித்து வரும் நேரத்தில், அனைத்து ஆதாரங்களையும் மக்களை காக்க பயன்படுத்த வேண்டும் என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி உள்ளது.
சென்ட்ரல் விஷ்டா திட்டத்துக்கு ரூ.20,000 கோடி - மோடி அரசுக்கு, பிரியங்கா காந்தி எச்சரிக்கை
x
உயிர்காக்கும் மருத்துவ ஆக்ஸிஜன், கொரோனா தடுப்பூசிகள், மருத்துவமனை படுக்கைகள், மருந்துகள் பற்றாக்குறையால் நாட்டு மக்கள்  அபாயத்தில் சிக்கித் தவித்து வரும் நேரத்தில், அனைத்து ஆதாரங்களையும் மக்களை காக்க பயன்படுத்த வேண்டும் என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி உள்ளது. இந்த நேரத்தில் 13 ஆயிரம் கோடி செலவில் பிரதமருக்கு, மத்திய பா.ஜ.க.அரசு புதிய வீட்டை கட்டுவதற்கு பதிலாக மக்களின் உயிரைக் காப்பாற்றும் பணியில் அனைத்து வளங்களையும் செலவழித்தால் நன்றாக இருக்கும் என காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசின் மத்திய அரசின் முன்னுரிமை, தங்களை தவிர்த்து வேறு திசையில் உள்ளதாக மக்களுக்கு தவறான செய்தியை கொண்டு சேர்க்கும் என பிரியங்கா காந்தி தமது பதிவில் எச்சரித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்