ஜனவரி 15 முதல் கால் செய்ய “பூஜ்ஜியம்“ (’0’) கட்டாயம்!

ஜனவரி 15ஆம் தேதி முதல் ’பூஜ்ஜியம்’(’0’) என்ற எண்ணை முன்னதாக டயல் செய்தால் மட்டுமே கால் செய்ய முடியும் என தொலைத்தொடர்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஜனவரி 15 முதல் கால் செய்ய “பூஜ்ஜியம்“ (’0’) கட்டாயம்!
x
ஜனவரி 15ஆம் தேதி முதல் ’பூஜ்ஜியம்’(’0’) என்ற எண்ணை முன்னதாக டயல் செய்தால் மட்டுமே கால் செய்ய முடியும் என தொலைத்தொடர்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதைப் பற்றிய செய்தியை விவரிக்கிறது இந்த தொகுப்பு.

இந்தியாவில் ஜனவரி 15ஆம் தேதி தொலைத்தொடர்புதுறை அமைச்சகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, உங்கள் லேண்ட்லைன் தொலைப்பேசியில் இருந்து ஒருவர் மொபைல் போனிற்கு கால் செய்ய விரும்பினால் “பூஜ்ஜியம்“ (’0’) என்ற எண்ணை முன்னதாக டயல் செய்தால் மட்டுமே கால் செய்ய முடியும். இதற்கு முன்னால் மாநிலம் விட்டு மாநிலம் டயல் செய்து பேச மட்டுமே “பூஜ்ஜியம்“(’0’)பயன்பாட்டில் இருந்துள்ளது. ஆனால் தற்பொழுது இந்தியாவில் எங்கு கால் செய்ய வேண்டுமானாலும் “பூஜ்ஜியம்“ (’0’) கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. ஒருவர் மொபைல் நம்பரில் இருந்து மற்றொரு மொபைல் நம்பருக்கு அழைப்பதில் எந்த ஒரு மாற்றமும் இல்லை. அதுபோல் லேண்ட்லைனில் இருந்து மற்றொரு லேண்ட்லைன் எண்ணுக்கு அழைப்பதிலும் எந்த மாற்றமும் இல்லை .

நாட்டின் லேண்ட்லைன் தொலைபேசியிலிருந்து மொபைல் எண்ணிற்கு அழைக்கும் முறை முற்றிலும் மாறிவிட்டது.  இந்த மாற்றத்தின் மூலம் எதிர்காலத்தில் தொலைதொடர்பு நிறுவனங்கள்  254.4கோடி புதிய எண்களை உருவாக்கும் வாய்ப்பு அமைந்துள்ளது. 

தொலைத் தொடர்புத்துறை வெளியிட்ட சுற்றறிக்கையில் “லேண்ட்லைனிலிருந்து மொபைல் எண்ணிற்கு டயல் செய்யும் முறையை மாற்ற TRAI பரிந்துரைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டது என தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. அதன்படி, டயல் செய்யும் முறையின் மாற்றத்தால்,  அதிக புதிய எண்களை வழங்க முடியும் எனவும் தெரிவித்துள்ளது.

மொபைல் எண்ணில் எதிர்காலத்தில் 11 இலக்கு எண்களை வெளியிடலாம் என்ற பரிந்துரைக்கு தொலைத்தொடர்பு நிறுவனங்கள் எதிர்ப்பை காட்டியுள்ளன. இந்த 11 எண் என்ற திட்டம் வாடிக்கையாளர்களுக்கு குழப்பத்தையும், சிரமத்தை ஏற்படுத்தும். மேலும், மென்பொருள் மற்றும் வன்பொருளில் (Software and hardware) பெரும் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். இதனால் கூடுதலாக செலவு அதிகரிக்கும் எனவும்  தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தெரிவித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்