"ஆங்கிலம், இந்தி மொழிகளில் மட்டுமே அறிவிக்கை" - டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்

மத்திய அரசின் அறிவிக்கைகள் அலுவல் மொழி சட்டத்தின்படி,ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் மட்டுமே வெளியிட அனுமதிப்பதாக டெல்லி உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆங்கிலம், இந்தி மொழிகளில் மட்டுமே அறிவிக்கை - டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்
x
இஐஏ எனப்படும் சூழலியல் தாக்க மதிப்பீடு அறிவிக்கை வரைவை 10 நாள்களில் 22 மொழிகளில் வெளியிடுமாறு  விக்ராந்த் தோங்கர் என்பவர் தொடர்ந்த வழக்கை டெல்லி உயர்நீதிமன்றம் விசாரித்து வருகிறது. இவ்வழக்கில் மத்திய அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது. சூழலியல் தாக்க மதிப்பீடு உள்ளிட்ட அறிவிக்கைகளை 8-ஆவது அட்டவணையில் உள்ள 22 மொழிகளில் கட்டாயமாக  மொழியாக்கம் செய்து வெளியிடவேண்டும் என்பது சட்டப்படி இல்லை என அதில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. அலுவல் மொழி சட்டத்தின்படி, மத்திய அரசின் அறிவிக்கைகள் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் மட்டுமே வெளியிட அனுமதிக்கிறது என்றும் , 22 மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டு மாநில அரசுகளிடமிருந்து பெறப்படும் சூழல் தாக்க மதிப்பீடு அறிவிக்கையின் உள்ளடக்கத்தை சரிபார்க்க முடியாது என்றும், அவற்றை வெளியிடுவதால் மேலும் குழப்பங்கள் அதிகரிக்கும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சூழலியல் தாக்க மதிப்பீடு அறிவிக்கை போன்றவற்றை சில மொழிகளில் மொழியாக்கம் செய்ய சில மாநில அரசுகளிடம் போதுமான நிபுணர்கள் இல்லை என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. மத்திய அரசின் அறிவிக்கைகளை அனைத்தும் பிராந்திய மொழிகள் அனைத்திலும் வெளியிடும்போது
ஒவ்வொரு மொழியிலும் பொருள் விளக்கம் அளிக்கப்படும் சூழல் ஏற்படும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சூழலியல் தாக்க மதிப்பீடு அறிவிக்கை குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்க இணையத்தில் கடந்த ஏப்ரல் 11-ஆம் தேதி வெளியிடப்பட்டதாகவும், இதுகுறித்து 20 லட்சத்துக்கும் அதிகமான ஆலோசனைகள், கருத்துக்கள்,  விமர்சனங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது ஆங்கிலம் மற்றும் இந்தியில் வெளியிடப்பட்ட சூழலியல் தாக்க மதிப்பீடு அறிவிக்கையை அதிகம் பேரை சென்றடைந்துள்ளதை எடுத்துக்காட்டுவதாகவும்,  எனவே மத்திய அரசின் மறு ஆய்வு மனுவை ஏற்க வேண்டும் என அந்த பிரமாண பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்