"2021ஆம் ஆண்டுக்கான ஹஜ் பயணம் தேசிய, சர்வதேச வழிகாட்டு நெறி முறைகளை பொருத்து இருக்கும்" - மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி தகவல்

கொரோனா தொற்று பரவல் காரணமாக அடுத்த ஆண்டுக்கான ஹஜ் பயணம், தேசிய மற்றும் சர்வதேச வழிகாட்டு நெறி முறைகளை பொருத்து இருக்கும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
2021ஆம் ஆண்டுக்கான ஹஜ் பயணம் தேசிய, சர்வதேச வழிகாட்டு நெறி முறைகளை பொருத்து இருக்கும் - மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி தகவல்
x
வரும் ஜூன்-ஜூலை மாதங்களில், 2021 ஆம் ஆண்டுக்கான ஹஜ் புனித பயண ஏற்பாடுகளை மேற்கொள்ளத திட்டமிடப்பட்டு உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதேநேரத்தில், இது தொடர்பான இறுதி முடிவு, கொரோனா தொற்று நேரத்தில் மக்கள் நலனை கருத்தில் கொண்டும் சவுதி அரேபியா அரசு மற்றும் மத்திய அரசு வழங்கும் நெறிமுறைகளை கருத்தில் கொண்டும் எடுக்கப்படும் என மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி தெரிவித்துள்ளார். முக்தார் அப்பாஸ் நக்வி தலைமையில் நேற்று நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. சவுதி அரேபிய அரசு முடிவு எடுத்த பின்னர், அதற்கான  விண்ணப்ப நடைமுறைகள் மற்றும் இதர ஏற்பாடுகளை இந்திய ஹஜ் குழு மற்றும் இதர மத்திய அரசு அமைப்புக்கள் முறைப்படி அறிவிக்கும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

 


Next Story

மேலும் செய்திகள்