திருவனந்தபுரம் தங்க கடத்தல் விவகாரம்: தங்க கடத்தல் பார்சலின் ரகசிய வார்த்தை - ஐ.ஏ.எஸ். அதிகாரி சிவசங்கரின் பகீர் வாக்குமூலம்

திருவனந்தபுரம் தங்க கடத்தல் நடந்தது எப்படி? ஐ.ஏ.எஸ். அதிகாரி சிவசங்கரன் தெரிவித்த வாக்குமூலம் பல உண்மைகளை வெளிச்சத்திற்கு கொண்டுவந்துள்ளது.
திருவனந்தபுரம் தங்க கடத்தல் விவகாரம்: தங்க கடத்தல் பார்சலின் ரகசிய வார்த்தை - ஐ.ஏ.எஸ். அதிகாரி சிவசங்கரின் பகீர் வாக்குமூலம்
x
திருவனந்தபுரம் தங்கக் கடத்தல் விவகாரம் தொடர்பாக என்ஐஏ,  சுங்கத்துறை, அமலாக்கத் துறை என பல்வேறு பிரிவுகளின் அதிகாரிகள் தனித்தனியே தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தங்க கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள் மற்றும் அவர்களோடு தொடர்புடையவர்கள் என பல்வேறு தரப்பில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கேரள முதல்வரின் முன்னாள் முதன்மை செயலாளரும், கேரள அரசின் தகவல் தொழில்நுட்பத் துறை செயலாளருமான ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கரனிடம் என்ஐஏ, சுங்கத்துறை, மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் தனித்தனியே விசாரணை மேற்கொண்டனர்.
அமலாக்கத் துறை அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையில், சிவசங்கர் தெரிவித்த வாக்குமூலத்தில் தங்கக் கடத்தல் பற்றிய பல ரகசியங்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.

தங்கம் மறைத்து வைக்கப்பட்டு கடத்தப்பட்ட டிப்ளமேட்டிக் பார்சலுக்கு தங்க கடத்தல் கும்பல் தனிப் பெயர் சூட்டி இருந்ததாக அவர் தெரிவித்துள்ளார். அந்தப் பெயர்தான் தங்கம் அடங்கிய பார்சலுக்கான அடையாளம் என்றும், அதை வைத்தே தங்கக் கடத்தல் பல காலமாக நடந்ததும் தெரியவந்துள்ளது.

தங்கம் அடங்கிய பார்சலுக்கு "CONSUL IS EATING MANGOES" என பெயர் வைக்கப்பட்டு இருந்ததாகவும், அந்தப் பெயர் ஸ்வப்னா சுரேஷ் மூலம் தனக்குத் தெரியும் என்றும், சிவசங்கரன் தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.டிப்ளமாட்டிக் பார்சல் மூலம் சுவப்னா சுரேஷ் தங்கம் மட்டுமின்றி பல்வேறு பொருட்களை அமீரகத்தில் இருந்து கேரளாவிற்கு கடத்தி கள்ளச்சந்தையில் விற்பனை செய்ததாகவும் சிவசங்கரன் தனது வாக்குமூலத்தில் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


Next Story

மேலும் செய்திகள்