"கொரோனாவுக்கு 'ரெம்டெசிவிர்' மருந்தை பயன்படுத்துவதால் பலனில்லை" - இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அறிக்கை

உலக சுகாதார அமைப்புடன் இணைந்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் நடத்திய ஆய்வில் கொரோனாவுக்கு 'ரெம்டெசிவிர்' மருந்தை பயன்படுத்துவதால் எந்த பலனும் இல்லை என்பது தெரியவந்துள்ளது.
கொரோனாவுக்கு ரெம்டெசிவிர் மருந்தை பயன்படுத்துவதால் பலனில்லை -  இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அறிக்கை
x
கொரோனாவுக்கு சிகிச்சை அளிப்பது தொடர்பாக ரெம்டெசிவிர், லோபினாவிர் -ரிட்டோனாவிர், இன்டர்பெரான் பீடா 1 ஏ மற்றும் ஹைட்ரோ குளோரோகுயின் ஆகிய நான்கு மருந்துகள் குறித்து கடந்த ஆறு மாதமாக நடந்த ஆய்வில், அவை அனைத்தும் ‌ கொரோனா சிகிச்சைக்கு ஏற்ற மருந்து இல்லை என்பது தெரியவந்துள்ளது. ஆரம்பக்கட்ட கொரோனா அறிகுறி உள்ளவர்கள் முதல் கொரோனாவுக்கு தீவிர சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் வரை அனைவருக்கும் ரெம்டெசிவிர் மருந்து கொடுத்து ஆய்வு செய்ததில், அவர்களின் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்பது இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த ஆய்வில் 30 நாடுகளை சேர்ந்த 11 ஆயிரம் பேர் பங்கேற்ற  நிலையில், 937 பேர் இந்தியர்கள் எனவும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. ஆய்விற்கு ஒத்துழைப்பு கொடுத்தவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தாருக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மருத்துவர்கள் நன்றி தெரிவித்துள்ளனர். 
இதற்கிடையே,  கொரோனா சிகிச்சைக்காக அமெரிக்க அதிபர் டிரம்ப், 
ரெம்டெசிவிர் மருந்தை எடுத்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது .


Next Story

மேலும் செய்திகள்