குப்கார் பிரகடனத்தை வென்றெடுக்க மக்கள் முன்னணி - அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு பின்னர் பரூக் அப்துல்லா தகவல்

குப்கார் பிரகடனத்தை வென்றெடுக்க மக்கள் முன்னணியை உருவாக்கி உள்ளதாக, தேசிய மாநாட்டு கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
குப்கார் பிரகடனத்தை வென்றெடுக்க மக்கள் முன்னணி - அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு பின்னர் பரூக் அப்துல்லா தகவல்
x
ஜம்மு, காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்த​ஸ்தை கடந்த ஆண்டு மத்திய அரசு ரத்து செய்ததுடன், அந்த மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அனைத்து எதிர்க்கட்சி தலைவர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில், உச்சநீதிமன்ற தலையீட்டை தொடர்ந்து வீட்டுச் சிறையில் உள்ளவர்கள் விடுவிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் அண்மையில் மக்கள் ஜனநாயக கட்சித் தலைவர் மெகபூபா முப்தி நேற்று முன்தினம் விடுவிக்கப்பட்டார். இந்நிலையில்,  அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் குப்கார் பிரகடனத்தை வென்றெடுக்க மக்கள் முன்னணியை உருவாக்க முடிவு செய்யப்பட்டு உள்ளதாக, செய்தியாளர்களிடம் பேசிய பரூக் அப்துல்லா தெரிவித்தார்.தங்களுடைய போராட்டம் அரசியல் சாசனம் சார்ந்தது என்றும், 2019 ஆகஸ்ட் 5க்கு முன்பு காஷ்மீர் மக்கள் அனுபவித்த சலுகைகளை திரும்ப மத்திய அரசு தரவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார். இதனை வென்றெடுக்கும் வரை தங்கள் போராட்டம் தொடரும் எனவும் பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்