மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஸ் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம்

மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஸ் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர எதிர்க்கட்சிகள் மாநிலங்களவை செயலரிடம் மனு அளித்துள்ளன.
x
மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஸ் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர எதிர்க்கட்சிகள் மாநிலங்களவை செயலரிடம் மனு அளித்துள்ளன. மாநிலங்களவையில் வேளாண் மசோதா நிறைவேற்றப்பட்ட போது, எதிர்க்கட்சிகள் வாக்குச்சீட்டு அடிப்படையிலான வாக்கெடுப்பு கோரின. ஆனால், துணை சபாநாயகர் ஹரிவன்ஸ் அதனை நிராகரித்தார். இதையடுத்து, வேளாண் மசோதாவை குரல் வாக்கெடுப்பு மூலமாக நிறைவேற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஹரிவன்ஸ் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர மாநிலங்களவை செயலரிடம் மனு அளித்துள்ளனர். அரசியலமைப்பு சட்டம் தங்களுக்கு வழங்கியுள்ள நியாயமான சட்ட உரிமையை துணை சபாநாயகர் நிராகரித்துள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.
Next Story

மேலும் செய்திகள்