கிருமி நாசினி தெளிப்பு சுரங்கப்பாதையை தவிர்க்குமாறு அறிவுறுத்தல் - மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தகவல்

கொரோனா கிருமி நாசினி தெளிக்கும் சுரங்கப் பயன்பாட்டை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
கிருமி நாசினி தெளிப்பு சுரங்கப்பாதையை தவிர்க்குமாறு அறிவுறுத்தல் - மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தகவல்
x
கொரோனா கிருமி நாசினி தெளிக்கும் சுரங்கப் பயன்பாட்டை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு  உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. பஞ்சாபை சேர்ந்த குர்சிம்ரன் சிங் நரூலா தாக்கல் செய்த பொதுநல மனு உச்சநீதிமன்ற நீதிபதி அசோக் பூஷண்தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, கொரோனா கிருமி நாசினி தெளிக்கும் சுரங்கப் பயன்பாடு மருத்துவரீதியாகவும், மனோத்துவ ரீதியாகவும் தீங்கை விளைவிக்கும் என கூறியுள்ளார். எனவே இதனை, தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது என வாதிட்டார்.
இதனை ஏற்ற நீதிபதி, தீங்கை விளைவிக்கும் என்றால் ஏன் அதைத் தடை செய்யவில்லை? என கேள்வி எழுப்பினார். கொரோனா கிருமி நாசினி தெளிக்கும் சுரங்கப் பயன்பாட்டை தடுக்க உரிய உத்தரவுகள் நாளை பிறப்பிக்கப்படும் என மத்திய அரசின் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்