கடலில் மூழ்கி 4 மீனவர்கள் மாயம் - காணாமல் போன மீனவர்களை தேடும் பணி தீவிரம்
கர்நாடகாவில் உடுப்பி அருகே அரபிக் கடலில் மீன் பிடித்து கொண்டிருந்த 4 மீனவர்கள் பெரிய அலையில் சிக்கி காணாமல் போயுள்ளனர்.
கர்நாடகாவில் உடுப்பி அருகே அரபிக் கடலில் மீன் பிடித்து கொண்டிருந்த 4 மீனவர்கள் பெரிய அலையில் சிக்கி காணாமல் போயுள்ளனர். காணாமல் போனவர்களை தேடும் பணியில் கடலோர காவல் படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். படகு கடலில் மூழ்கும் பரபரப்பு காட்சிகள் கரையருகே இருந்த நபர் செல்போனில் படம் பிடித்துள்ளார். படகுடன் அலையில் சிக்கி மீனவர்கள் தத்தளிக்கும் பரபரப்பு காட்சிகள் பதிவாகியுள்ளன. மூழ்கிய படகில் 12 மீனவர்கள் இருந்த நிலையில், 8 பேர் நீந்தி கரை சேர்ந்தனர். நான்கு மீனவர்களின் கதி என்ன என தெரியாததால் தேடும் பணி நடைபெற்று வருகிறது
Next Story

