இரண்டு லாரிகள் நேருக்கு நேர் மோதிக்கொண்டு தீ பிடித்தது - 2 பேர் உயிரிழப்பு, 4 பேர் காயம்

மத்தியப் பிரதேசம் மாநிலம் சியோனி மாவட்டத்தில் இரண்டு லாரிகள் நேருக்கு நேர் மோதிக்கொண்டு தீ பிடித்ததில் 2 பேர் உயிரிழந்தனர்.
இரண்டு லாரிகள் நேருக்கு நேர் மோதிக்கொண்டு தீ பிடித்தது - 2 பேர் உயிரிழப்பு, 4 பேர் காயம்
x
மத்தியப் பிரதேசம் மாநிலம் சியோனி மாவட்டத்தில் இரண்டு லாரிகள் நேருக்கு நேர் மோதிக்கொண்டு தீ பிடித்ததில் 2 பேர் உயிரிழந்தனர். 4 பேர் காயம் அடைந்துள்ளனர்.  ஜபல்பூர்-நாக்பூர் நெடுஞ்சாலையில் சபாரா பகுதியில் நேற்று இரண்டு லாரிகள் நேருக்கு நேர் மோதிக்கொண்டது. அப்போது எதிர்பாராத விதமாக தீ பற்றி எரிந்ததால், இரண்டு பேர் தீயில் கருகி உயிரிழந்தனர். காயம் அடைந்த நிலையில் 4 பேர் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, சப்பாரா காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்