வரி செலுத்தி வருபவர்களைக் கவுரவிக்கும் வகையில் புதிய திட்டம் - இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி

முறையாக வரி செலுத்தி வருபவர்களைக் கௌரவிக்கும் வகையில், புதிய திட்டம் ஒன்று வகுக்கப்பட்டுள்ளது.
வரி செலுத்தி வருபவர்களைக் கவுரவிக்கும் வகையில் புதிய திட்டம் - இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி
x
முறையாக வரி செலுத்தி வருபவர்களைக் கௌரவிக்கும் வகையில், புதிய திட்டம் ஒன்று வகுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தை  பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைக்கிறார். வெளிப்படையான வரி விதிப்பு, நேர்மையாளரை மதித்தல் என்ற இந்தத் திட்டத்தை, காணொளி காட்சி மூலம் தொடங்கி வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகள், பல்வேறு வர்த்தக அமைப்பினரும் கலந்துகொள்கின்றனர். நேர்மையாக வரி செலுத்துவோருக்கு சலுகை வழங்குவதும் மற்றவர்களை ஊக்குவிப்பதும் இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும் என்று கூறப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்