மூணாறு ராஜமலை நிலச்சரிவின் கோரம் - தேனிலவு நகரம் நரகமான சோகம்

பார்க்கும் இடமெல்லாம் பச்சைப் பசேல் என்று தேயிலை தோட்டங்களும், மனதை சில்லிடவைக்கும் குளுகுளுதென்றலும் என புதுமண தம்பதியினரின் தேனிலவு நகரமான மூணாறு, இன்று நரகமாகக் காட்சியளிக்கிறது.
x
பெயரில் மட்டுமே கம்பீரத்தை கொண்டிருக்கும் ராஜமலை, அதை நம்பிவந்த பல தொழிலாளர்களையும், அவர்தம் குடும்பங்களையும்
கருணையில்லாமல் மண்ணோடு மண்ணாகப் புதைத்துவிட்டது.

ராஜமலைப் பகுதியில் பெய்துவரும் தொடர் மழையால் மிகப்பெரிய நிலச்சரிவு ஏற்பட்டு, தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் குடியிருப்பு மொத்தமாகப் புதைந்தது. மொத்தம் 40 வீடுகள் இருந்த நிலையில், சுமார் 25 வீடுகளில் தொழிலாளர்கள் வசித்து வந்திருக்கிறார்கள்.

இதுவரை 49 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இன்னும் 20க்கும் அதிகமானவர்கள் மண்ணுக்குள் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. தொடர் மழையால் மீட்பு பணிக்குச் சென்று களத்தில் நிற்பவர்களும் கண்கலங்கி நிற்கின்றனர்.

தேயிலைத்தோட்டத்தில் சொற்ப வருமானத்திற்கு கூலிகளாக சென்றவர்களின் குடும்பங்கள் ஒட்டுமொத்தமாக உருத்தெரியாமல் போய்விட்டன.

Next Story

மேலும் செய்திகள்