தூதரக அதிகாரியுடன் தொடர்பில் இருந்த ஸ்வப்னா சுரேஷ் - தொடர்பை உறுதி செய்த செல்போன் உரையாடல்கள்

திருவனந்தபுரம் தங்க கடத்தல் வழக்கில் கைதான ஸ்வப்னா சுரேஷ் தூதரக அதிகாரியுடன் தொடர்பில் இருந்த தகவல் உறுதியான நிலையில் அவரிடமும் விசாரணை நடத்த என்ஐஏ அதிகாரிகள் முடிவெடுத்துள்ளனர்.
தூதரக அதிகாரியுடன் தொடர்பில் இருந்த ஸ்வப்னா சுரேஷ் - தொடர்பை உறுதி செய்த செல்போன் உரையாடல்கள்
x
கேரள மாநிலம் திருவனந்தபுரம் தங்க கடத்தல் விவகாரத்தில் ஸ்வப்னா சுரேஷ் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். இந்த விவகாரம் வெளிவந்த ஜூன் 30-ஆம் தேதி முதல் ஜூலை 5ஆம் தேதி வரை தூதரக அலுவலகத்தின் முதன்மை அதிகாரியான அமீரகத்தை சேர்ந்த நபரோடு ஸ்வப்னா சுரேஷ் செல்போனில் பேசி வந்துள்ளார். ஒருநாளைக்கு குறைந்தது 10 முறைக்கும் மிகாமல் அவர் பேசியிருக்கிறார். இதில் ஜூலை 3ம் தேதி மட்டும் 20 முறை பேசியதாகவும், பார்சலை திறந்து தங்கத்தை கைப்பற்றிய 5ஆம் தேதி எட்டு முறை ஸ்வப்னா பேசிய ஆதாரம் அதிகாரிகளுக்கு கிடைத்துள்ளது. ஸ்வப்னா அளித்த தகவலின் படி தூதரக அலுவலகம் முதன்மை அதிகாரிக்கும் இந்த கடத்தல் சம்பவத்தில் முக்கிய பங்கு இருப்பது உறுதியாகி உள்ளதால் அவரையும் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வர என்ஐஏ அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இதேபோல் தூதரக அலுவலகத்தின் கன் மேன் ஜெயகோஷையும் கொச்சிக்கு வரவழைத்து விசாரணை நடத்த சுங்கத்துறை தயாராகி வருகிறது. 


Next Story

மேலும் செய்திகள்