ராமர் கோயில் கட்டுவதற்கான பூமி பூஜை - ஆகஸ்ட் 5-ல் நடத்த முடிவு

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான பூமி பூஜைக்கான பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.
ராமர் கோயில் கட்டுவதற்கான பூமி பூஜை - ஆகஸ்ட் 5-ல் நடத்த முடிவு
x
அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான பூமி பூஜை ஆகஸ்ட் 5-ம் தேதி நடைபெறுகிறது.  இந்நிலையில் 40 கிலோ வெள்ளியால் செய்யப்பட்ட அடிக்கல் அங்கு  நாட்டப்பட உள்ளது. ராமர் கோயில் கட்டுமான பணிகளை மேற்பார்வையிட 'ஸ்ரீ ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ர அறக்கட்டளை' என்ற பெயரில் அறக்கட்டளை அமைக்கப்பட்டது. இதன்  தலைவராக மகந்த் நிருத்ய கோபால்தாஸ் நியமிக்கப்பட்டார். பூமி பூஜை விழாவில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.  மேலும் உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத், பீஹார் முதல்வர் நிதீஷ்குமார் ஆகியோருக்கும் அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்