டி.எஸ்.பி. உள்பட 8 காவலர்களை சுட்டுக் கொன்ற உத்தரப்பிரதேச பிரபல ரவுடி விகாஷ் தூபே கைது

டி.எஸ்.பி. உள்பட 8 காவலர்களை சுட்டுக் கொன்ற உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த பிரபல ரவுடி விகாஷ் தூபே மத்தியப் பிரதேச மாநிலத்தில் கைது செய்யப்பட்டார்.
x
ரவுடி மற்றும் அரசியல்வாதியான விகாஷ் தூபே மீது உத்தரப்பிரதேச மாநிலத்தில் கொலை உள்ளிட்ட 60-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. கடந்த 1990 ஆம் ஆண்டில் காவல் நிலையத்தில் வைத்து அமைச்சர் ஒருவரை கொலை செய்த வழக்கில் விகாஷ் தூபே முக்கிய குற்றவாளி என  கூறப்படுகிறது. இந்நிலையில், அவரை கைது செய்ய சென்ற டி.எ​ஸ்.பி. உள்ளிட்ட 8 காவல் துறையினரை, விகாஷ் தூபே கும்பல் சுட்டுக் கொன்றது. இது உத்தரப்பிரதேச அரசியலில் பெரும் அதிர்வ​லையை ஏற்படுத்தியது. மொத்த கும்பலையும் கண்டுபிடிக்க முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்ட நிலையில், விகாஷின் நெருங்கிய கூட்டாளி மற்றும் காவல் ஆய்வாளர் ஒருவர் கைது செய்யப்பட்டனர். நேற்று கைதான மற்றொரு கூட்டாளியான பிரபாத் மிஸ்ரா சிறையில் இருந்து தப்பிக்க முயன்ற போது சுட்டுக் கொல்லப்பட்டு உள்ளார். இதேபோல, கான்பூர் ச​ம்பவத்தின் போது விகாஷ் தூபே உடன் இருந்த பஹுவா துபேவும் இன்று காலை என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், விகாஷ் தூபே மத்திய பிரதேசத்தில் கைதாகி உள்ளார். மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைனியில் உள்ள  மஹாகல் கோவிலில் வைத்து விகாஷ் துபே கைது செய்யப்பட்டதாக அம்மாநில அமைச்சர் நரோத்தம் மிஸ்ரா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக உத்தரப் பிரதேச போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளதாகவும் அவர் ​தெரிவித்துள்ளா​ர்.
Next Story

மேலும் செய்திகள்