இந்தியாவில் கொரோனாவால் 4.90 லட்சம் பேர் பாதிப்பு

இந்தியாவில் இதுவரை இல்லாத வகையில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 17 ஆயிரத்து 296 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
x
* இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4 லட்சத்து 90 ஆயிரத்து 401 ஆக உயர்ந்துள்ளது. இதில் 2 லட்சத்து 85 ஆயிரத்து 637 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  1 லட்சத்து 89 ஆயிரத்து 463 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 15 ஆயிரத்து 301 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

* இந்தியாவில் அதிகம் பாதிக்கப்பட்ட இடத்தில் முதலாவது இடத்தில் மகாராஷ்டிரா மாநிலம் உள்ளது. இதுவரை 1 லட்சத்து 47 ஆயிரத்து 741 பேர் இங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 63 ஆயிரத்து 357 பேர் குணமடைந்துள்ள நிலையில், 77 ஆயிரத்து 453 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை இங்கு 6 ஆயிரத்து 931 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்..

* 2வது இடத்தில் டெல்லி உள்ளது. இதுவரை இங்கு, 73 ஆயிரத்து 780 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 44 ஆயிரத்து 765 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ள நிலையில், 26 ஆயிரத்து 586 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இங்கு 2 ஆயிரத்து 429 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். 

* தமிழகத்தில் 70 ஆயிரத்து 977 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், 3வது இடத்தில் தமிழகம் உள்ளது. 39 ஆயிரத்து 999 பேர் குணமடைந்த நிலையில், 30 ஆயிரத்து 67 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். 911 பேர் இங்கு கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். 

* 4வது இடத்தில் குஜராத் உள்ள நிலையில், இங்கு பாதிப்பு எண்ணிக்கை 29 ஆயிரத்து 520 ஆக உள்ளது. 21 ஆயிரத்து 498 பேர் குணமடைந்துள்ள நிலையில், 6 ஆயிரத்து 269 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை குஜராத்தில் ஆயிரத்து 1753 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். 

* 5வது இடத்தில் உத்தரப்பிரதேசம் உள்ள நிலையில், இங்கு 20 ஆயிரத்து 193 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 13 ஆயிரத்து 119 பேர் குணமடைந்த நிலையில், 6 ஆயிரத்து 463 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இங்கு 611 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்

Next Story

மேலும் செய்திகள்