திருப்பதி ஏழுமலையான் கோயில் உண்டியலில் பண மழை

ஊரடங்கு காலத்திலும் திருப்பதி ஏழுமலையான் கோயில் உண்டியலில் பண மழை கொட்டுகிறது.
திருப்பதி ஏழுமலையான் கோயில் உண்டியலில் பண மழை
x
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஊரடங்குக்கு முன்பு நாளொன்றுக்கு   90 ஆயிரம் பேர் வரை சாமி தரிசனம் செய்துவந்தனர். அப்போதெல்லாம் நாளொன்றுக்கு 2 கோடி முதல் மூன்று கோடி ரூபாய் வரை உண்டியல் காணிக்கை கிடைத்தது.

தற்போது ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதை அடுத்து, கடந்த 11ஆம் தேதி முதல் ஆந்திர மாநிலத்தில் உள்ள பக்தர்கள் மட்டுமே சுவாமியை தரிசிக்க அனுமதிக்கப்படுகிறார்கள். நாளொன்றுக்கு 6,000 டிக்கெட்டுகள் மட்டுமே பக்தர்களுக்கு விநியோகிக்கப்படுகிறது. இதைத்தவிர  விஐபிகள் வரிசையில் 500 முதல் 700 பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். ஊரடங்குக்குப் பின் நடைதிறந்த முதல் நாளில் 43 லட்சம் ரூபாயும், இரண்டாவது நாளில் 40 லட்ச ரூபாயும் உண்டியல் காணிக்கையாக கிடைத்துள்ளது.

பக்தர்களின் வருகை வெறும் 10 சதவீதம் தான் என்றாலும் உண்டியல் காணிக்கை மட்டும் குறையவில்லை. ஊரடங்கால் கடந்த மூன்று மாதங்களாக
பல்வேறு தொழில்களும்  முடங்கிக் கிடக்கும் நிலையில், ஏழுமலையானுக்கு காணிக்கை அள்ளிக் கொடுக்க தயாராக இருக்கும் பக்தர்களால் கோவிலின் உண்டியலில் பண மழை கொட்டுகிறது.


Next Story

மேலும் செய்திகள்