மகாராஷ்டிராவில் 1 லட்சத்தை கடந்த கொரோனா தொற்று - தமிழகம், டெல்லி, குஜராத் மாநிலங்களில் தீவிரமாகும் தொற்று
இந்தியாவில் கொரோனா வைரஸ் 3 லட்சத்து 20 ஆயிரம் பேரை தாண்டி வேகமாக பரவிவருவது அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் 3 லட்சத்து 20 ஆயிரம் பேரை தாண்டி வேகமாக பரவிவருவது அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. உலகின் மிக மோசமான தாக்குதலாக பரவும் கொரோனா வைரஸை கட்டுக்குள் வைக்க சர்வதேச அளவில் அவசர ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனா தொற்று11 ஆயிரத்து 929 பேருக்கு பரவியுள்ளது. ஒரே நாளில் 311 பேர் உயிரிழந்துள்ளனர். ஒரு லட்சம் பேருக்கு மேல் கொரோனா தொற்று பரவி, மகாராஷ்டிரா மாநிலம் முதலிடத்தில் உள்ளது. தமிழகம் 42 ஆயிரம் பேரைக் கடந்து 2-வது இடத்திலும், டெல்லியில் 38 ஆயிரத்து 958 பேருக்கு கொரோனா பரவியுள்ளது. குஜராத்தில் 23 பேருக்கு தொற்று உள்ளது. மும்பை, டெல்லி, சென்னை உள்ளிட்ட மக்கள் நெருக்கமாக வாழும் நகரங்களில் கொரோனா வேகமாக பரவி வருவது குறிப்பிடத்தக்கது.
Next Story