பள்ளிகள், கல்லூரிகள் திறப்பு எப்போது? - மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் விளக்கம்

ஆகஸ்ட் மாதத்திற்கு பிறகு பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிலையங்கள் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அமைச்சர் ரமேஷ் போக்ரியால் தெரிவித்துள்ளார்.
பள்ளிகள், கல்லூரிகள் திறப்பு எப்போது? - மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் விளக்கம்
x
கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் மாதம்16ஆம் தேதி முதல் நாடு முழுவதும் பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டு இருக்கின்றன. சில தளர்வுகளுடன் ஊரடங்கு நடைமுறையில் உள்ள நிலையில், பள்ளிகள், கல்லூரிகள் திறப்பு எப்போது என கேள்வி எழுந்துள்ளது. இது குறித்து ஜூலை மாதம் முடிவு செய்யப்படும் என ஏற்கனவே மத்திய அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில், ஆகஸ்ட்  மாதத்திற்குப் பிறகு பள்ளி கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிலையங்கள் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் தெரிவித்துள்ளார். அதிகாரிகள் மட்டத்தில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இன்னும் எந்தவிதமான இறுதி முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் அவர் கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்