ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா?
ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் தற்காலிக உறுப்பினர் பதவிக்கான தேர்தலில் இந்தியாவின் நோக்கங்களை வெளியுறவு அமைச்சகம் பட்டியலிட்டுள்ளது.
ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் தற்காலிக உறுப்பு நாடுகளுக்கான தேர்தல் வரும் ஜூன் 14ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் போட்டியிடும் ஆசிய பசிபிக் பிராந்தியத்தின் ஒரே பிரதிநிதியாக இந்தியா உள்ளது. இதில் இந்தியா போட்டியின்றி தேர்வு செய்யப்படுவது உறுதியாகி உள்ள சூழ்நிலையில் பாதுகாப்பு கவுன்சிலில் போட்டியிடுவதற்கான பரப்புரையை இந்தியா துவக்கியுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெயசங்கர், அமைதி வளர்ச்சி மரியாதை பேச்சுவார்த்தை ஒத்துழைப்பு ஆகிய ஐந்தும் இந்தியாவின் நோக்கம் என்று தெரிவித்துள்ளார் .சவால்கள் தொடர்ந்து இருக்கும் எனவும் தீவிரவாதம் அதற்கு மிகச் சிறந்த உதாரணம் என்றும் குறிப்பிட்டுள்ள வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் உலக அளவிலான பங்களிப்பை இந்தியா அளிக்க முடியும் எனவும் பேச்சுவார்த்தைக்கும் பாரபட்சமற்ற நடவடிக்கைக்கும் இந்தியா வழி ஏற்படுத்தும் எனவும் தெரிவித்துள்ளார்.
Next Story

