ஜூன் 8 முதல் திருப்பதியில் சாமி தரிசனத்துக்கு அனுமதி - தேவஸ்தான ஊழியர்கள், உள்ளூர் மக்களுக்கு முதலில் அனுமதி

திரும​லை திருப்பதி தேவஸ்தான கோரிக்கையை ஏற்று வரும் திங்கள் முதல் சாமி தரிசனத்துக்கு அம்மாநில அரசு அனுமதி வழங்கி உள்ளது.
ஜூன் 8 முதல் திருப்பதியில் சாமி தரிசனத்துக்கு அனுமதி - தேவஸ்தான ஊழியர்கள், உள்ளூர் மக்களுக்கு முதலில் அனுமதி
x
திரும​லை திருப்பதி தேவஸ்தான கோரிக்கையை ஏற்று வரும் திங்கள் முதல் சாமி தரிசனத்துக்கு அம்மாநில அரசு அனுமதி வழங்கி உள்ளது. முதலில் தேவஸ்தான ஊழியர்கள், உள்ளூர் மக்களுக்கு சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கி உள்ளது. 6 அடி இடைவெளி உடன் மக்கள் வரிசையில் வந்த சாமி தரிசனம் செய்ய அரசு அறிவுறுத்தி உள்ளது. இதனிடையே அரசின் இந்த அறிவிப்பை தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினர் சேகர் ரெட்டி வரவேற்றுள்ளார். படிப்படியாக பிற மாநில மக்களுக்கும் சாமி தரிசனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்