புதுச்சேரியில் மேலும் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - "தேவையில்லாமல் வெளியில் செல்வதை தவிருங்கள்" - பொது மக்களுக்கு சுகாதாரத்துறை இயக்குநர் வேண்டுகோள்

புதுச்சேரியில் மருத்துவர், கர்ப்பிணி பெண் உட்பட மேலும் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
புதுச்சேரியில் மேலும் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - தேவையில்லாமல் வெளியில் செல்வதை தவிருங்கள் - பொது மக்களுக்கு சுகாதாரத்துறை இயக்குநர் வேண்டுகோள்
x
புதுச்சேரியில் மருத்துவர், கர்ப்பிணி பெண் உட்பட மேலும் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய, அம்மாநில சுகாதாரத் துறை இயக்குனர் மோகன்குமார், தற்போது  46 நபர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்தார். மேலும், ஜிப்மரில் பணியும் மருத்துவர், அண்மையில் வளைகாப்பு நடத்தப்பட்ட பெண் ஒருவர் என 9 பேருக்கு நேற்று ஒரே நாளில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதாக கூறினார். சமூக இடைவெளியை கடைபிடிப்பதுடன், முகக்கவசம் அணிகூதுடன் மட்டும் அல்லாது,  தேவையில்லாமல் வெளியே செல்வதை மக்கள் தவிர்க்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்