உலகை ஈர்த்த பேரழகு முக(ம்) கவசம்

முகக் கவசம் முக அழகை மறைக்கும் என நாம் நினைத்திருப்போம்.
உலகை ஈர்த்த பேரழகு முக(ம்) கவசம்
x
முகக் கவசம் முக அழகை மறைக்கும் என நாம் நினைத்திருப்போம். ஆனால், அழகோ அழகு என அழகை கூட்டவும் ஒரு முகக்கவசத்தால் முடியும் என நிரூபித்திருக்கிறது இந்த கல்யாண வீடியோ. அசாம் மாநிலத்தில் நடைபெற்ற இந்த திருமணக் காட்சி இப்போது இணையத்தை ஆக்கிரமித்திருக்கிறது. மணமகனுக்கு பட்டு வேட்டியின் டிசைனோடு ஒரு பட்டு முகக் கவசம். மணமகளுக்கு பட்டுப் புடவையின் நீட்சியாக பல்வேறு வேலைப்பாடுகள் கொண்ட மிக முகக்கவசம். இந்த மாஸ்கின் அழகா? அல்லது அதை அணிந்திருக்கும் கண்களின் அழகா? எது காரணமென்று யாருக்கும் தெரியவில்லை. ஆனால், இந்த மாஸ்க் முகம் மில்லியன் கணக்கானவர்களை சுண்டி இழுத்து வருகிறது. கொரோனா தடுப்புக்காக முகக்கவசம் அணிவது கட்டாயமாகிவிட்ட நிலையில், அந்த முகக்கவசத்திலும் ஃபேஷன் எட்டிப் பார்க்கிறது. புதுப்புது கண்டுபிடிப்புகள் முகக்கவசத்தை அலங்கரிக்கின்றன. அது பற்றி சுவாரஸ்யமாக விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு... முகக்கவசத்தில் ஃபேஷனை புகுத்தும் முயற்சி இங்குமட்டுமில்லை. உலகம் முழுக்க நடக்கிறது. அமெரிக்காவைச் சேர்ந்த Stefanie Hook என்ற பெண் தயாரித்திருக்கும் மேஜிக் மாஸ்க் இது. சாதாரண கருப்பு நிற முகக் கவசமாக இருக்கும் இது, நாம் அணிந்து கொண்ட மெல்ல மெல்ல உருவம் மாறி ஓவியத்தைக் காட்ட ஆரம்பிக்கும். நிஜமாகவே இது மாய மந்திரம் இல்லை. சூடுபட்டால் நிறம் மாறும் தெர்மல் பெயின்ட் கொண்டு இவர் முகக்கவசங்களில் ஓவியம் வரைகிறார். அணிபவரின் மூச்சுக் காற்று பட்டு அந்த சூட்டில் இந்த ஓவியம் வெளியே தெரிகிறது.

மாஸ்க் அணிந்தால் காது வலிக்கிறது என்ற பிரச்னை நமக்கு மட்டுமல்ல உலகம் முழுக்க எல்லோருக்கும் இருக்கிறது. அதற்காகவே இப்போது புதிதாக உருவாக்கப்படுகிறது இந்தப் பொருள். முகக்கவசத்தை காதுகளில் மாட்டாமல் இருபக்க எலாஸ்டிக்கையும் இணைப்பதற்காக பயன்படுத்தப்படும் இதனை Ear Guard என்றும் மாஸ்க் ரோப் என்றும் சொல்கிறார்கள். சீனாவில் தயாரிக்கப்படும் இந்த பிளாஸ்டிக் பொருள் ஆன்லைன் விற்பனையில் அதகளம் பண்ணுகிறது. இதையே ஸ்வட்டர் பின்னுவது போல தங்களுக்கு தாங்களே செய்துகொள்ளும் டிரெண்டும் இப்போது அதிகரித்து வருகிறது. காலத்துக்கு ஏற்ற மாற்றம் என்பது இதுதான்!

Next Story

மேலும் செய்திகள்