உலகை ஈர்த்த பேரழகு முக(ம்) கவசம்

முகக் கவசம் முக அழகை மறைக்கும் என நாம் நினைத்திருப்போம்.
உலகை ஈர்த்த பேரழகு முக(ம்) கவசம்
x
முகக் கவசம் முக அழகை மறைக்கும் என நாம் நினைத்திருப்போம். ஆனால், அழகோ அழகு என அழகை கூட்டவும் ஒரு முகக்கவசத்தால் முடியும் என நிரூபித்திருக்கிறது இந்த கல்யாண வீடியோ. அசாம் மாநிலத்தில் நடைபெற்ற இந்த திருமணக் காட்சி இப்போது இணையத்தை ஆக்கிரமித்திருக்கிறது. மணமகனுக்கு பட்டு வேட்டியின் டிசைனோடு ஒரு பட்டு முகக் கவசம். மணமகளுக்கு பட்டுப் புடவையின் நீட்சியாக பல்வேறு வேலைப்பாடுகள் கொண்ட மிக முகக்கவசம். இந்த மாஸ்கின் அழகா? அல்லது அதை அணிந்திருக்கும் கண்களின் அழகா? எது காரணமென்று யாருக்கும் தெரியவில்லை. ஆனால், இந்த மாஸ்க் முகம் மில்லியன் கணக்கானவர்களை சுண்டி இழுத்து வருகிறது.

Next Story

மேலும் செய்திகள்