இ.பி.எப் பங்களிப்பு 10 சதவீதமாக குறைப்பு - ஜூன் மாத ஊதியம் அதிகரிக்குமா?

பொருளாதார ஊக்குவிப்பு நடவடிக்கையாக, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கு பிடிக்கும் தொகையை 12 சதவீதத்திலிருந்து 10 சதவீதமாக குறைப்பதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்திருந்தார்.
இ.பி.எப் பங்களிப்பு 10 சதவீதமாக குறைப்பு - ஜூன் மாத ஊதியம் அதிகரிக்குமா?
x
பொருளாதார ஊக்குவிப்பு நடவடிக்கையாக, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கு பிடிக்கும் தொகையை 12 சதவீதத்திலிருந்து 10 சதவீதமாக குறைப்பதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்திருந்தார். அதன்படி தொழிலாளர்கள் தரப்பிலிருந்தும் நிறுவனங்கள் தரப்பிலிருந்தும் செலுத்தப்படும் பங்களிப்புத் தொகை 10 சதவீதமாகக் குறைக்கப்படும் என்பதால், தொழிலாளர்கள் கையில் பெறும் சம்பளத்தின் அளவு அதிகமாக இருக்கும். இந்த திட்டத்தை மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அமல்படுத்தியுள்ளது. அதன்படி, மே, ஜூன், ஜூலை மாதங்களுக்கு இ.பி.எஃப் பங்களிப்புத் தொகை 10 சதவீதமாக இருக்கும். இந்த அறிவிப்பின் மூலம் 6 லட்சத்து 50 ஆயிரம் தொழில் நிறுவனங்களும், 4 கோடியே 30 லட்சம் தொழிலாளர்களும் பயன்பெறுவார்கள் என கூறப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்