நீரவ் மோடியை நாடு கடத்தும் வழக்கு - லண்டன் நீதிமன்றத்தில் இறுதி விசாரணை தொடக்கம்

லண்டன் தப்பிச் சென்ற வைர வியாபாரி நீரவ் மோடியை இந்தியாவுக்கு நாடு கடத்துவதற்கான இறுதி விசாரணை லண்டன் நீதிமன்றத்தில் இன்று நடைபெற உள்ளது.
நீரவ் மோடியை நாடு கடத்தும் வழக்கு - லண்டன் நீதிமன்றத்தில் இறுதி விசாரணை தொடக்கம்
x
கடந்த ஆண்டு மார்ச் மாதம் லண்டனில் கைது செய்யப்பட்ட அவர், லண்டன் வாண்ட்ஸ்வொர்த் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது ஜாமீன் மனு 5 முறை தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், மார்ச் 11 ஆம் தேதி இறுதி விசாரனை நடைபெறும் என வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றம் அறிவித்திருந்தது. ஆனால் தற்போது கொரோனா தொற்று காரணமாக சமூக இடைவெளி உள்ளிட்ட கட்டுப்பாடுகள் நீடிப்பதால், நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்படுத்தப்படுவரா என்பது உறுதிசெய்யப்படவில்லை. சிறையில் இருந்தபடியே நீதிபதி சாமுவேல் கூஸ் முன்னிலையில் காணொலி மூலம் ஆஜராவதற்கு வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்