புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்பும் விவகாரம் - மாநில அரசுகளுக்கு உள்துறை செயலாளர் கடிதம்

பிறமாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் நடந்து சொந்த ஊர் திரும்புவதை அனுமதிக்க வேண்டாம் என மாநிலங்களை மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்பும் விவகாரம் - மாநில அரசுகளுக்கு உள்துறை செயலாளர் கடிதம்
x
பிறமாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் நடந்து சொந்த ஊர் திரும்புவதை அனுமதிக்க வேண்டாம் என மாநிலங்களை மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.  தங்கள் சொந்த மாநிலங்களுக்கு செல்ல மத்திய அரசு சிறப்பு ரயில்கள் இயக்கி வருதாக மாநில தலைமை செயலாளர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் உள்துறை செயலாளர் அஜய் பல்லா சுட்டிக்காட்டி உள்ளார். இந்த விவகாரத்தில் மத்திய அரசுக்கு ஒத்துழைக்குமாறு மாநில அரசுகளை அவர் கேட்டுக் கொண்டுள்ளர். பேருந்துகள் மற்றும் ஷ்ராமிக் சிறப்பு ரயில் சேவை நடைபெற்று வரும் நிலையில், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் சாலையிலோ அல்லது ரயில் பாதையிலோ நடந்து செல்லாத நிலையை  உறுதி செய்யுமாறும் உள்துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது. புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு கூடுதல் ரயில்கள் இயக்க மாநில அரசுகள் ஒத்துழைக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்