புதுச்சேரியில் 2 பேர் மட்டுமே கொரோனா சிகிச்சையில் உள்ளனர் - புதுச்சேரி சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணராவ் தகவல்
புதுச்சேரியில் கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு இரண்டு பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர்.
புதுச்சேரியில் கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு இரண்டு பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா வைரசால் 13 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், 11 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் காரைக்கால் மற்றும் ஏனாமில் இதுவரை ஒருவருக்கு கூட கொரோனா தொற்று உறுதி செய்யப்படாத நிலையில், அந்த இரண்டு பகுதிகளும் தொடர்ந்து பச்சை மண்டலமாக இருந்து வருகிறது. அண்டை மாவட்டங்களில் இருந்து பொதுமக்கள் வருவதை தடுத்ததாலேயே இதை கட்டுப்படுத்த முடிந்ததாகவும், மத்திய அரசு ஒரு ரூபாய் கூட நிதி தரவில்லை என்றும் அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணராவ் தெரிவித்துள்ளார்.
Next Story

