புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் பெண் ஒருவருக்கு கொரோனா - ஊரடங்கை நீட்டிக்க சுகாதாரத்துறை கோரிக்கை

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் முதல் முறையாக ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் பெண் ஒருவருக்கு கொரோனா - ஊரடங்கை நீட்டிக்க சுகாதாரத்துறை கோரிக்கை
x
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் முதல் முறையாக ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் 8 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்ட நிலையில், அதில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டார். மேலும் 4 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில் 3 பேர் மட்டுமே இந்திராகாந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனிடையே, ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கடலூர் மாவட்டத்தை சேர்ந்த பெண் ஒருவருக்கு இன்று கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய மாநில சுகாதாரத்துறை இயக்குநர் மோகன்குமார், மாநிலத்தில் மே 3 ஆம் தேதிக்கு பிறகு ஊரடங்கை நீட்டிக்க வேண்டுமென அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்