மத்திய இயந்திர ஆராய்ச்சி மையம் உருவாக்கிய ரோபோ - கொரோனா நோயாளிகளை கவனித்து கொள்ளும்

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளை கவனித்து கொள்ளும் ரோபோ ஒன்றை மத்திய இயந்திர ஆராய்ச்சி மையம் உருவாக்கியுள்ளது.
மத்திய இயந்திர ஆராய்ச்சி மையம் உருவாக்கிய ரோபோ - கொரோனா நோயாளிகளை கவனித்து கொள்ளும்
x
கொரோனா பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு  சிகிச்சையளிக்கும் மருத்துவர்களுக்கும், செவிலியர்களுக்கும் அத்தொற்று ஏற்படுகிறது. இதனை தடுக்கும் வகையில் HCARD என்ற ரோபோ உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ரோபோவை பயன்படுத்தி   செவிலியர்கள் நோயாளிகளுக்கு மருந்து, உணவு  பொருட்களை வழங்க முடியும். நோயாளிகளிடம் இருந்து மாதிரிகளை சேகரிக்கவும் இந்த ரோபோ பயன்படுகிறது. சுமார் 80 கிலோ எடை கொண்ட HCARD ரோபோவின் விலை ஐந்து லட்சம் ரூபாயாகும். மருத்துவ பணியாளர்களுக்கு இந்த ரோபோ மிகவும் உதவிகரமாக இருக்கும் என்று CSIR மையத்தின் இயக்குனர் ஹரிஷ் ஹிராணி தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்