கடன் திட்டங்களிலிருந்து வெளியேறும் பரஸ்பர நிதியகங்களை அவசர நிலையாக பாவிக்க வேண்டும் - ப.சிதம்பரம் வலியுறுத்தல்

கடன் திட்டங்களிலிருந்து பரஸ்பரநிதி அமை​ப்புகள் வெளியேறுவதை அவசர நிலையாக பாவித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் வலியுறுத்தியுள்ளார்.
கடன் திட்டங்களிலிருந்து வெளியேறும் பரஸ்பர நிதியகங்களை அவசர நிலையாக பாவிக்க வேண்டும் - ப.சிதம்பரம் வலியுறுத்தல்
x
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்,  ஃப்ராங்கிளின் டெம்பிள்டன் பரஸ்பர நிதிநிறுவனம் 6 கடன் நிதி திட்டங்களிலிருந்து வெளியேறியுள்ளதை சுட்டிக்காட்டியுள்ளார்.  2008ம் ஆண்டு உலகளாவிய பொருளாதார சிக்கலின் போது  இதே போன்ற சூழல் நிலவியபோது ,  மறுநாளே கூடுதலாக அரை சதவிகிதம் ரெபோ வட்டி விகிதத்தில் மாற்றம் செய்து ரிசர்வ் வங்கி அறிவித்ததாகவும், ப.சிதம்பரம் குறிப்பிட்டுள்ளார். இரண்டு நாட்கள் சந்தை விடுமுறையாக இருக்கும் நிலையில் திங்கட்கிழமைக்குள் உரிய நடவடிக்கையை அரசு எடுக்கும் என நம்புவதாக ப.சிதம்பரம் கூறியுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்