வீடுகளுக்கே நேரில் சென்று கொரோனா சோதனை செய்யும் நடமாடும் பரிசோதனை ஆய்வகம் உருவாக்கம் - ராஜ்நாத்சிங்

வீடுகளுக்கே நேரில் சென்று கொரோனா சோதனை செய்யும் வகையில், நடமாடும் ஆய்வகம் உருவாக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார்.
வீடுகளுக்கே நேரில் சென்று கொரோனா சோதனை செய்யும் நடமாடும் பரிசோதனை ஆய்வகம் உருவாக்கம் - ராஜ்நாத்சிங்
x
வீடுகளுக்கே நேரில் சென்று கொரோனா சோதனை செய்யும் வகையில், நடமாடும், ஆய்வகம் உருவாக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார்.  இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சித்துறை இந்த ஆய்வகத்தை உருவாக்கியதாக அவர் கூறியுள்ளார். இந்த நகரும் மொபைல் ஆய்வு கூடம், பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று கொரோனா பாதித்தவர்களை சோதனை செய்து உடனடியாக முடிவுகளை தெரிவிக்கும் என கூறியுள்ளார். இதன்  மூலம் தினம் தோறும் ஆயிரம் பேருக்கு கொரோனா சோதனை செய்ய முடியும் என்று ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்