"இந்தியாவில் 170 மாவட்டங்கள் கொரோனாவால் அதி தீவிரமாக பாதிக்கப்பட்ட மாவட்டங்கள்" - மத்திய சுகாதாரத்துறை தகவல்

இந்தியாவில் 170 மாவட்டங்கள் கொரோனாவால் அதி தீவிரமாக பாதிக்கப்பட்ட மாவட்டங்கள் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் 170 மாவட்டங்கள் கொரோனாவால் அதி தீவிரமாக பாதிக்கப்பட்ட மாவட்டங்கள் - மத்திய சுகாதாரத்துறை தகவல்
x
இந்தியாவில், 170 மாவட்டங்கள் கொரோனாவால் அதி தீவிரமாக  பாதிக்கப்பட்ட மாவட்டங்கள் என்றும், 207 மாவட்டங்கள் குறைவான பாதிப்புக்குள்ளான  மாவட்டங்கள் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய சுகாதாரத்துறை செயலாளர் லாவ் அகர்வால், கொரோனா பாதிப்பு அதிதீவிரமாக உள்ள இடங்களில் வீடு வீடாக சென்று ஆய்வு நடத்தப்படும் என கூறியுள்ளார்.கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனா தொற்றால் 1118 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதுவரை  பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11 ஆயிரத்து 933 -ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. உயிரிழந்தோர் எண்ணிக்கை 392-ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்