"மருத்துவரின் பரிந்துரை இருந்தால் மது வழங்கலாம்" - கேரள அரசின் உத்தரவுக்கு உயர்நீதிமன்றம் இடைக்கால தடை

கேரளாவில் ஊரடங்கு காலத்தில் மருத்துவரின் குறிப்பு சீட்டு இருந்தால் மது வழங்கலாம் என்ற அம்மாநில அரசின் உத்தரவுக்கு உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
மருத்துவரின் பரிந்துரை இருந்தால் மது வழங்கலாம் - கேரள அரசின் உத்தரவுக்கு உயர்நீதிமன்றம் இடைக்கால தடை
x
கேரளாவில் மது குடிப்பவர் மருத்துவரால் வழங்கப்பட்ட குறிப்பு சீட்டு கொண்டு வந்தால் ஒரு வாரத்திற்கு 3 லிட்டர் மது வழங்கலாம் என அம்மாநில அரசு உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து கேரள அரசின் மது விற்பனை நிறுவனமான பெவ்கோ- நிறுவனமும் மதுக்கடைகளுக்கு உத்தரவிட்டது. இதற்கு இந்திய மருத்துவ கழகம் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இந்நிலையில், கேரள அரசின் உத்தரவிற்கு எதிராக அம்மாநில உயர்நீதிமன்றத்தில் காங்கிரஸ் எம்.பி. பிரதாபன் வழக்கு தொடர்ந்தார்.  கேரள அரசின் உத்தரவு மது குடிப்பவர்களை மதுவிலிருந்து மீட்பதற்கு பதிலாக மீண்டும் மதுவுக்கு அடிமையாக்குவதாக உள்ளதாகவும், மருத்துவர்களை அவமதிக்கும் வகையில் உள்ளநாகவும் மனுவில் குறிப்பிட்டிருந்தார். இதை விசாரித்த உயர்நீதிமன்றம் கேரள அரசின் உத்தரவுக்கு 3 வார இடைக்கால தடை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்