ரிசர்வ் வங்கி உத்தரவை பின்பற்றாத வங்கிகள்

வங்கிக் கடன்கள் செலுத்துவதற்கு ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள சலுகைகளை பல்வேறு வங்கிகளும் முறையாக நிறைவேற்றவில்லை என புகார் எழுந்துள்ளது.
ரிசர்வ் வங்கி உத்தரவை பின்பற்றாத வங்கிகள்
x
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக தொழில்கள் முடங்கியுள்ள நிலையில், மார்ச் , ஏப்ரல், மே மாத வங்கிக் கடன்களை செலுத்துவதற்கு ரிசர்வ் வங்கி கால அவகாசம் வழங்கியது. இதன்படி வீட்டுக்கடன், வாகனக்கடன், தனிநபர் கடன், கிரெடிட் கார்டு உள்ளிட்டவற்றின் தவணைத் தொகைகளை அபராதம் இன்றி  ஜூன் மாதம் செலுத்தலாம் என அறிவித்திருந்தது. இந்த அறிவிப்பினை வாடிக்கையாளர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ, இந்தியன் வங்கி ஆகியவை அறிவித்துள்ளன. ஆனால் பல்வேறு தனியார் வங்கிகளும் ரிசர்வ் வங்கியின் அறிவிப்பை பின்பற்றாமல் வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கில் இருந்து ஏப்ரல் மாதத்துக்கான தவணைகளை பிடித்தம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஐசிஐசிஐ, ஹெச்டிஎப்சி , கரூர் வைஸ்யா வங்கி உள்ளிட்டவை கட்டணங்களை பிடித்தம் செய்துள்ளன. வேலைவாய்ப்பு இல்லாமல் வருமானம் இழந்துள்ள நிலையில், வங்கிகளின் இந்த நடைமுறையால் வாடிக்கையாளர்ளிடையே குழப்பம் நீடித்து வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்