நிதிசார் அவசர நிலையை அறிவிக்கக்கோரி வழக்கு - உச்சநீதிமன்றம் விசாரிக்கிறது

கொரோனா ஊரடங்கை தொடர்ந்து, நிதிசார் அவசர நிலையை பிரகடனப்படுத்த உத்தரவிடக்கோரிய வழக்கு உச்ச நீதிமன்றத்தில் ஏப்ரல் 1ம் தேதி விசாரணைக்கு வருகிறது.
நிதிசார் அவசர நிலையை அறிவிக்கக்கோரி வழக்கு - உச்சநீதிமன்றம் விசாரிக்கிறது
x
கொரோனா நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக அமல்படுத்தப்பட்டு உள்ள ஊரடங்கு உத்தரவை ஓட்டி, அரசியலமைப்பு சட்டம் 360-வது பிரிவை பயன்படுத்தி, நிதிசார் அவசர நிலையை அறிவிக்க உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.  பொறுப்பு மற்றும் முறையான  மாற்றத்துக்கான மையம் இந்த வழக்கை தொடர்ந்துள்ளது. மனுவில் மின்சாரம், குடிநீர், எரிவாயு, தொலைபேசி ஆகியவற்றுக்கான கட்டணங்களையும், மாதாந்திர தவணை உள்ளிட்டவற்றையும் வசூலிக்க தடை விதிக்குமாறு மனுதாரர் கோரியுள்ளார். அத்தியாவசிய சேவைகள் பாதிக்கப்படாத வகையில், உள்துறை அமைச்சகத்தின் உத்தரவுகளை மாநில காவல் துறையும், மாவட்ட நிர்வாகமும் பின்பற்ற உத்தரவிட வேண்டும் என்றும் அதில் கோரப்பட்டு உள்ளது.  


Next Story

மேலும் செய்திகள்