"ரேசனில் அரிசி கிலோ ரூ.3-க்கு கிடைக்கும்" - மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவிப்பு

ரேசன் கடைகளில் பயனாளிகளுக்கு அரிசி கிலோ மூன்று ரூபாய்க்கும், கோதுமை இரண்டு ரூபாய்க்கும் வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
x
ரேசன் கடைகளில் பயனாளிகளுக்கு அரிசி கிலோ மூன்று ரூபாய்க்கும், கோதுமை இரண்டு ரூபாய்க்கும் வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதில் விரைவில் மாவட்டங்கள் தோறும் கொரோனா தொடர்பான உதவி தொலைபேசி எண்கள் அமைக்கப்படும் என்றும், ஒப்பந்த தொழிலாளர்களுக்கு இலவச உணவு வழங்கவும்  தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், ஊரடங்கு உத்தரவை மக்கள் முழுமையாக கடைபிடிக்க வேண்டும் என்றும், கடைகளில் பொருட்கள் வாங்க கூட்டம் கூடினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்